கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-18)
போன எபிசோடை தொலைபேசியோடு முடித்திருந்தோம். சினிமாக்களில் காதலர் நடுவே டெலிபோன் நுழைந்து பல காலமாகிறது , வயர் பிடித்து வழிந்த நேரத்திலிலிருந்து கணவன்-மனைவியாக கரம் பிடித்தபின் அதுவே ' தொல்லை '- பேசியாகிவிடுகிறது. ஏன் இப்படி ? "Why Men Don't Listen & Women Can't Read Maps: How we're different and what to do about it" என்ற தங்கள் புத்தகத்தில் , எழுத்தாளர்கள் ஆலன் மற்றும் பார்பரா பீஸ் இதற்கான காரணங்களை விளக்குகிறார்கள்: "ஆண்கள் தொலைபேசியை மற்றவர்களுக்குத் தகவல் - களையும் செய்திகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு கருவியாகப் பார்க்கிறார்கள் ; ஆனால் பெண்கள் அதை ஒருவருக்கொருவர் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளும் வழியாகக் கருதுகிறார்கள். ' ஒருமுறை நான் என் மனைவியிடம் ஆறு மாதங்கள் பேசவில்லை ' என்று ஒரு நகைச்சுவை நடிகர் கூறினார் ; ' அவர் பேசுவதற்கிடையில் நான் குறுக்கிட விரும்பவில்லை ' என்பதே அதற்குக் காரணம். ஒரு பெண் உங்களிடம் அதிகமாகப் பேசுகிறாள் என்றால் , அவளுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம். அவள் உங்களிடம் பேசவில்லை என்றால்...