கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-27)
பண்டைய கடினமான தமிழ்ப் பாடல்களை எடுத்தாண்டு , எளிமைப்படுத்தி , எளியோருக்கும் என்ஜாய் பண்ணும் வகையில் கண்ணதாசன் கொடுத்திருக்கிறார் என்பதை ' காப்பி ' என்று கொச்சைப் படுத்தாமல் , இன்னும் சில பாடல்களை சுருக்கமாகப் பார்ப்போம். ஆழ்வார்களைத் தொட்டால் , நாயன்மார்கள் கோபிப்பார்கள். கம்பரை பிடித்துக் கொண்டு வள்ளுவரை விட்டு விட்டால் , அவரும் கோச்சுப்பார். அவை அனைத்தையும் சுருக்கமாகவேனும் பார்ப்போம். சிலப்பதிகாரத்திலிருந்து சினிமாவுக்குள் நுழைந்தது , "அச்சம் என்பது மடமையடா , அஞ்சாமை திராவிடர் உடமையடா" (படம்: மன்னாதி மன்னன்) பாடலில் கண்ணதாசன் சேவையால் வரும் , " கனகவிஜயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேர மகன் , இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி , இசை பட வாழ்ந்தான் பாண்டியனே." வாத்தியார் திருவள்ளுவரை திருப்திப் படுத்த மூணு குரள்களை “ நீ உன்னை அறிந்தால் ” என்ற ஒரே பாட்டில் கொண்டு வந்தார் கவிஞானி (படம்: வேட்டைக்காரன்). அவருக்கே மூணு என்றால் சிம்ம குரலு(ளு)க்கு டபுள் ஆக்கி ஆறு குரள்களை ' ஆண்டவன் கட்டளை ' யாக (படம்) வைத்தார் கண்ணதாசன் : "ஆறு மனமே ...