கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-34)
' என்ன சார் , அஞ்சு வயசு பிள்ளைகளை வளைச்சு வளர்க்க வழி சொல்லறேன்னுட்டு , அம்பது வயசு பெற்றோரை வளைய சொல்றீங்க ? ஒடிஞ்சு போயிட மாட்டோமா! ' என ஒரு நண்பர் கேட்டார். இந்த கேள்வியே ஒரு பொறி சுய உணர்வினால் வந்தது. இந்தியா முழுதும் xerox கடைக்காரர்கள் சொல்லுகிற மகா தத்துவம் என்ன ? ' ஒரிஜினல் மாதிரிதான் சார் காப்பியும் வரும்! ' நம் தாய்-தகப்பன் ஒரிஜினல் எப்படியோ அதை டெய்லி காப்பி அடித்து வளர்ந்த குழந்தைகள் மட்டும் improved version- ஆக வரணும் என்றால் நடக்கிற காரியமா ? தவிர விளையும் போதே ' விழித்துக் கொள்ள ' அவர்கள் என்ன ரமண மஹரிஷியா ? நாமும் எப்போது சுய உணர்வு பெற்றோம் ? சம்சார சாகரத்தின் அலையில் மொத்துண்டு முழுகி முத்தெடுத்த பின் தானே! வயது 30,40,50,60- களில் ஓட்டை உடம்பு ' நான் கூட வரமாட்டேன் போ! ' என்று அடம்பிடித்த பின் , எதிரே runway- யும் குறைந்து கொண்டே வருவதையும் , எப்போது வேண்டு - மானாலும் 'take off' ஆகி விடுவோம் என்கிற அறிவு உறுத்தி விழிக்கும் போது தானே நமக்கும் ' விழிப்பு ' வருகிறது. நாம் ஊர் பட்டினத்தார் மாதிரி ' பட்ட பின் வந...