கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-19)
போன எபிசோடில் காதல் , கல்யாண , குடும்ப உரசல்கள் உருவாகாமல் தடுக்க ஆண்-பெண் இரு பாலருக்குமான நிறைய படிப்பினைகளைப் பார்த்தோம். கவி ஞானி கண்ணதாசனே இதை அருமையாகப் பாடியிருக்கிறார் (படம்: உத்தரவின்றி உள்ளே வா): " காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ... கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்" ‘ பெண்கள் பாராட்டுதல்களையும் ஆணின் தொடர்ந்த கவனிப்பையும் ( Women need attention) வெகுவாக விரும்பு - கிறார்கள். அதுவே ஒரு ஆண் தன் வெளி உலகில் செய்யும் சாதனைகளையும் தன பிரத்தியேக சாஹஸத் திறனையும் தன் துணை பாராட்டவேண்டும் ( men need appreciation & praise) என்று எதிர்பார்க்கிறார்கள் ’ என்கிற மனோதத்துவ ஞானத்தைப் காதல் பாட்டிலேயே கொண்டு வருகிறார் கண்ணதாசன்: " பூமாலை நீ தந்து சீராட்டினால் புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன் பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம் சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்" நாம் முன் எபிசோட் ஒன்றில் நியூக்ளியஸ் சிவாவை சுற்றிவரும் பார்வதி எலெக்ட்ரோனை மேலாக தொட்ட...