கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-2).
என்னைத்
உசுப்பிவிட்ட ரமேஷிற்கு நன்றி. மேலும், இதைத் தொடர்ந்து முன்னெடுத்துச்
செல்லப் பல புதிய யோசனைகளைத் தந்து என்னை ஊக்குவித்ததற்கும். 'Quantum
Entanglement' (குவாண்டம் பின்னல்) எனும் சிக்கலான கோட்பாட்டை நான் இதில்
அவசியம் சேர்க்க வேண்டும் என்று வாட்ஸ்அப்பில் அவர் குறிப்பிட்டிருந்தார். அது என்னால்
சாத்தியமாகுமா என்று பார்ப்போம். இது குறித்து கூகுள் பின்வருமாறு கூறுகிறது:
குவாண்டம்
பின்னல் (Quantum Entanglement) என்பது
இயற்பியலில் ஒரு துகளின் நிலை, மிகத்தொலைவில் உள்ள மற்றொரு
துகளின் நிலையை உடனடியாகவும், பிரிக்க முடியாத வகையிலும்
பாதிக்கும் ஒரு விசித்திரமான நிகழ்வாகும்.
இதன்
முக்கிய அம்சங்கள்:
- தொடர்பு
(Interconnection): இரண்டு துகள்கள் (துகள்கள் A
மற்றும் B) ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்ட
பிறகு, எவ்வளவு தூரம் (பிரபஞ்சத்தின் மறுமுனையாக
இருந்தாலும்) பிரிந்தாலும் அவை ஒன்றாகவே செயல்படும்.
- உடனடி
தாக்கம் (Instantaneous effect): துகள் A-வின் நிலையை மாற்றினால், துகள் B-ன் நிலை உடனடியாக மாறும்.
ஒரு
நடைமுறை உதாரணத்துடன் இதை எளிமையாகப் புரியவைக்க, திருவிடைமருதூரின் Station Master Jayaraman’s
son, ஜே.எஸ் (Jeyes), சென்னையிலிருந்து
கண்ணதாசன் மற்றும் குவாண்டம் இயற்பியல் குறித்து எழுதுகிறார். ஆச்சரியப்படும் விதமாக,
அவரைப் போலவே, TDR Writer Jayaraman’s Son (இவரை
எழுதியவருக்கு அவ்வளவாகத் தெரியாதவருமான) mirror image மாதிரி, எஸ்.ஜே (YesJay?) "சுந்தர்(ரேசன்)",
உலகின் மறுமுனையிலிருந்து (அமெரிக்கா) உடனடியாக அதே விஷயத்தில் தனது
புரிதலைப் பகிர்ந்துகொள்கிறார்!
பிரபஞ்ச அளவில் விரிவாகப் பார்த்தால், குவாண்டம் சிக்கல் (Quantum Entanglement) என்ன சொல்கிறது என்றால், (குறும்பாகச் சொல்வதானால்), (இந்திய) State/மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு துகள் மாற்றம் அடையும்போது, (ஐக்கிய) அமெரிக்காவிலிருந்து/States வெகு தொலைவில் இருந்தாலும், மற்றொரு துகள் அதற்குச் சமமாகப் பதிலளிக்கிறது!
கடந்த
காலத்தின் மற்றொரு மாபெரும் தமிழ் ஞானியான திருமூலரையும் இதில் கொண்டு வந்த சுந்தருக்கு
நன்றி. இப்போது நான் பாரதியார், ரமண மகரிஷியையும் இதில்
இழுத்துவிட்டதால், நாம் விவாதிக்கும் தலைப்புடன் தொடர்புடைய மற்ற
ஞானிகளின் (as well as books) பார்வையையும் நாம் துணைக்கு அழைக்கலாம்.
இதை ஏன் கண்ணதாசனுடன் மட்டும் சுருக்க வேண்டும்? ஆனால்,
நாம் மேலும் தொடர்வதற்கு அவரது தெளிவு நிறைந்த பாடல்களை அடிப்படையாகக்
கொள்வோம்.
அடுத்த
பாடல்... கொடி அசைந்ததும் காற்று வந்ததா..?
எல்லோருக்கும்
அறிமுகமான/பிடித்த இப்பாடலில், பின்வரும் வரிகள் குவாண்டம்
எந்திரவியலுக்கும் (quantum mechanics) இந்திய ஆன்மீகத்திற்கும்
தொடர்புடையவை:
“கண் திறந்ததும் காட்சி வந்ததா….
காட்சி
வந்ததும் கண் திறந்ததா?”
முன்னர், நான் புகழ்பெற்ற இரட்டைப் பிளவு சோதனையைப் (Double Slit Experiment) பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதன் முடிவு என்னவென்றால், காண்பவன் காணப்படுவதை (காட்சியை) பாதிக்கிறான் (Seer affects the seen!).
நமது
இந்திய ஆன்மீகம் இதை வேறுவிதமாகக் கூறுகிறது, நாம் காண்பதை
நாமே உருவாக்குகிறோம். We don’t see, but we only see what ‘we want to
see’. சற்று நினைவுகூருங்கள், உங்கள் நேற்றிரவு
உறக்கத்தின்போது இந்த உலகம்/பிரபஞ்சம் எங்கே இருந்தது? ஆனால்
நீங்கள் கண்விழித்த கணத்தில் இவை அனைத்தும் எப்படித் தோன்றின? ஞானிகள் பொதுவாக நம்மை ஆராயச் சொல்லும் முக்கியக் கேள்வி இதுதான்:
நீங்கள்
இந்த உலகில் இருக்கிறீர்களா அல்லது ஒவ்வொரு முறை கண்விழிக்கும்போதும் (உங்களுக்கென)
ஒரு உலகத்தை உருவாக்குகிறீர்களா? நம்மால் உருவாக்கப்பட்ட
பிரபஞ்சங்களில் 'நாம்' வாழ்கிறோம் என்பதையும்,
நமது தனிப்பட்ட உலகங்கள் நாம் சந்திக்கும் ஒவ்வொரு உயிரினத்துடனும் எல்லைகளற்றுப்
பகிரப்பட்டு/ இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
இப்போது, நாம் கண்ணதாசனனின் பாடலுக்கு வருவோம். மனிதனின் அடிப்படை மாயைகளைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் இந்த 'கோழியா முட்டையா' போன்ற கேள்வித் தொடரில், அவர் காதலையும் ஆன்மீகத்தையும் எவ்வளவு அழகாக இணைக்கிறார். (கோழியா முட்டையா, எது முதலில் வந்தது என்ற புதிர்?). எல்லாவற்றிற்கும் மேலாக, காதலுக்குப் பிறகே ஞானம் வரும்.
மனிதப் பார்வையின் இந்த மாயை குறித்து, மகாகவி பாரதியார் எழுப்பிய கேள்விகளின் வரிசையை இப்போது காண்போம்.
“நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
—
வானகமே இளவெய்யிலே மரம்சரிவே
நீங்கள் எல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சி பிழைதானோ
போனதெல்லாம்
கனவினைபோல்
உடைந்தேழுந்தே போனதனால்
நானும் ஒர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ
—
காலமென்றெ ஒரு நினைவும்
காட்சி என்று பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்கு குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம்
மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பதன்றோ
நானும் ஒர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ”
வாசகர்கள்
இதை ரசிக்கிறார்கள் என்றால், வரும் அத்தியாயங்களில்
கவியரசர் மற்றும் பலர் வெளிப்படுத்தும் (குவாண்டம் அறிவியலில்
இருந்து சற்று விலகி), மற்ற மனித மனம் & உறவுகள் தொடர்பான சங்கடங்களுக்கு நகர்வோம். எல் ஆர் ஈஸ்வரி பாடிய சில கிளப்
டான்ஸ் பாடல்களில் தத்துவ குண்டுகள் உள்ளன! சிரிக்காதீர்கள் அல்லது முகம் சுளிக்காதீர்கள்.
இன்னும் சற்று ஆழமாக தோண்டுவோம்..
கவியரசர்
கூறியது போல் "எது வரை போகுமோ.....அது வரை போகலாம்...
புதுவகை
ரசனையோடு பார்க்கலாம்
(ஞானத்தின்) ஆழத்தை இங்கு தானே காணலாம்!”
Comments
Post a Comment