Posts

Showing posts from 2012

காகித ஜனநாயகம்

நியூஸ்பேப்பர் விற்ற அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கியது இந்திய ஜனநாயகம். இப்போது பிரெசிடெண்ட் ஆக பலர் போட்டி போடுகிறார்கள்; ஆனால் நகரத்தில் காலையில் பேப்பர் போடுவதற்கு பையன்கள் கிடைப்பதில்லை! -ஜேயெஸ்

நினைத்தது, மனதை நனைத்தது! (குட்டிக் கவிதைகள்)

ஆணழகனே! காலையிலேயே நீ சிரிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துவிடுகிறது கண்ணாடியில் முகம் கோணி ஷேவ் செய்யும்போது! புதுப்புது அர்த்தங்கள் கணவனின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு நாளும் விதவிதமாய் அர்த்தம் கொடுக்கும் மனைவி ஒரு நடமாடும் நவீன டிக்சனரி. மயங்குகிறான் ஒரு மானுடன் அம்மா , அக்கா , தங்கை , தோழி , மனைவி , மகளை ‘ மனுஷி ’ யாகப் பார்க்கும் ஆணுக்கு மற்ற பெண்கள் உடம்பாகத் தெரிவதேன் ? சொல்லாமல் சொல்வது என்னவென்றால் “ஒரு கிலோ புடலங்காய் இத்தனூண்டு கறியாக வதங்கி விட்டது!” என்றாள் மனைவி. உன் காந்தலில் என்னை மாதிரி சுருங்கி விட்டது என்று நினைத்துக் கொண்டான் கணவன் , ஆனால்சொல்லவில்லை!            ஆறு மனமே விடிகாலையில் மனதுக்குள் எட்டிப் பார்த்தேன் ; ஒரே ட்ராக்கில் ஒடிக் கொண்டிருந்த ‘ அது ’ ஆச்சரியமாய் , நான் பார்க்கும்போது மட்டும் குழந்தைகள் STATUE விளையாடுவதுபோல் , நின்றுவிட்டு நான் திரும்பியவுடனேயே மறுபடி தன் இஷ்டத்துக்கு ஓட...

பொங்கும் பொங்கல் நினைவுகள்

கிராமத்திலேயே பிறந்து இருபது வருடங்களுக்குப் பின் மும்பை நரகத்தில் மூச்சைத் தொலைத்து , திரும்பவும் மண்வாசனையால் பொங்கி வரும் பொங்கல் நினைவுகளை எழுதுகிறேன். தமிழிலேயே யோசித்து , தமிழில் பேசி , தமிழ் எழுதியவனுக்கு , முப்பது வருடங்களின் இந்தி ஆங்கில தாக்கத்தால் , தமிழ் தடுமாறுகிறது. பொங்கல் என்றாலே முதல் நினைவு தம்பி மூன்றாவது படித்தபோது எழுதிய கட்டுரையில் ‘ காலி ’ ல்லாத கடைசீ சிரிப்பு வரி: “எல்லோரும் பெ ங்கலோ பெ ங்கலென்று பெ ங்கினார்கள்”. இதைச் சொல்லியே தங்கை இத்தனை வருடங்களும் தம்பியின் ‘ காலை ’ வாரிக் கொண்டிருக்கிறாள். அப்பா ரெயில்வே அதிகாரி. அந்தக் காலத்தில் அந்த வேலைக்கு கிராமங்களில் மரியா ’ தை ’. அதனால் , ‘ தை ’ வந்தால் ஊர் விவசாயிகள் பொங்கலுக்கு புது அரிசி தருவார்கள். அம்மா பானைக்கு இஞ்சி மஞ்சள் மாலையிட்டு சர்க்கரைப் பொங்கல் வடிப்பாள். என் குறியெல்லாம் பானையின் அடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் வெல்லத்திலேயே இருக்கும். செங்கரும்பைக் கடித்து பல் உடைந்த நினைவும் வருகிறது. ‘ கட்டை ’ ப் பையனாக இருந்த எனக்கு உயிரோட்டமும் , உணர...