நினைத்தது, மனதை நனைத்தது! (குட்டிக் கவிதைகள்)
ஆணழகனே!
காலையிலேயே நீ சிரிக்க
ஒரு வாய்ப்பு
கிடைத்துவிடுகிறது
கண்ணாடியில் முகம் கோணி
ஷேவ் செய்யும்போது!
புதுப்புது அர்த்தங்கள்
கணவனின் ஒவ்வொரு
சொல்லுக்கும்
ஒவ்வொரு நாளும்
விதவிதமாய் அர்த்தம்
கொடுக்கும் மனைவி
ஒரு நடமாடும் நவீன
டிக்சனரி.
மயங்குகிறான் ஒரு மானுடன்
அம்மா, அக்கா, தங்கை,
தோழி, மனைவி, மகளை
‘மனுஷி’யாகப் பார்க்கும்
ஆணுக்கு
மற்ற பெண்கள்
உடம்பாகத் தெரிவதேன்?
சொல்லாமல் சொல்வது
என்னவென்றால்
“ஒரு கிலோ புடலங்காய்
இத்தனூண்டு
கறியாக
வதங்கி விட்டது!”
என்றாள் மனைவி.
உன்
காந்தலில்
என்னை
மாதிரி
சுருங்கி
விட்டது என்று
நினைத்துக்
கொண்டான் கணவன்,
ஆனால்சொல்லவில்லை!
ஆறு
மனமே
விடிகாலையில்
மனதுக்குள்
எட்டிப்
பார்த்தேன்;
ஒரே
ட்ராக்கில் ஒடிக் கொண்டிருந்த ‘அது’
ஆச்சரியமாய்,
நான்
பார்க்கும்போது மட்டும்
குழந்தைகள்
STATUE
விளையாடுவதுபோல், நின்றுவிட்டு
நான் திரும்பியவுடனேயே
மறுபடி
தன் இஷ்டத்துக்கு
ஓட
ஆரம்பித்து விட்டது!
-ஜேயெஸ்
Jeyes
ReplyDeleteI like the Manadhukkul ettippartthen Kavithai.
Great continue writing Jeyes
Ara...
//மயங்குகிறான் ஒரு மானுடன்//
ReplyDeleteநல்லதொரு கவிதை.
வாழ்த்துகள்.
தொடர்ந்து எழுதுங்கள்